ஒரு _ கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார் ... எழுபத்தைந்து வயதில் ..... ஆதரவு இன்றி நிக்குது மனசு ... நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம் .... என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம் .... அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம் .. ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம் .. ஒரு நாளாவது அவளுக்கு பதில் - நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம் .. ஒரு நாளாவது TV யையும் , Mobil லையும் அணைத்துவிட்டு , அவளை கொஞ்சி இருக்கலாம் .. ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம் ... ஒரு நாளாவது - என் விடுமுறை நாட்களில் - அவளை சினிமாவுக்கு அழைத்து சென்று இருக்கலாம் .. ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம் ... அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம் . ...